சிறுவர் சிறுமியர் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாவது அதிகரித்து வருவதாக பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் பிள்ளைகள் தொடர்பில் அசட்டையாக இருப்பதாலும் பெற்றோர் தமது பிள்ளைகளை உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு வெளிநாடு செல்கின்றமையினாலும் சிறுவர்கள் பெரியவர்களினாலும் சம வயதுடையவர்களாலும் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாடசாலை செல்லும் 16 வயதுக்குட்பட்ட மாணவிகள் காதல் தொடர்பு வைத்திருப்பதன் காரணமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாவதுடன் அவர்கள் சட்டரீதியற்ற முறையில் கணவன் மனைவியாக நடந்து கொள்வதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக 15 வயதுக்கு குறைந்த சிறுமியர் குழந்தை பெறுவது அதிகரித்துள்ளதுடன் இது தொடர்பாக வைத்தியர்கள் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவுக்கு அறிவிப்பதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.
No comments:
Post a Comment