Monday, August 29, 2011

நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறில்.

ஓய்வுபெற்ற சிரேஷ்டபொலிஸ் அதிகாரி ஒருவருடைய வீட்டில் இருந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான நகை மற்றும், பணம், என்பவற்றை திருடிய சம்பவம் தொடர்பாக, நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யபட்ட தம்பதியினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட நகை, பணம், என்பவற்றில் ஒரு பகுதியை நம்பிக்கை மோசடி செய்தமை தொடர்பாக தேடப்பட்டு வந்த நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமசிறிலியனகே இன்று நீர்கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் ஆஜரானார்.

இதனை அடுத்துபொலிஸ் அதிகாரியின் சார்பில் விடுக்கப்பட்ட பிணை கோரிக்கையை நிராகரித்த நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.எம்என்.பி.அமரசிங்க சந்தேக நபரான பொலிஸ் அதிகாரியை நாளை செவ்வாய்க்கிழமை (30)வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நாளைய தினம் சந்தேக நபரை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டார்.

இதேவேளை, இச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் நாளை இந்த வழக்கு விசாரணைக்காக ஆஜராகவுள்ளனர்.

No comments:

Post a Comment