எம்பிலிபிட்டிய நகராதிபதி பதவிக்கு சூழ்ச்சி
எம்பிலிபிட்டிய நகர சபையின் நகராதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜாதிக ஹெல ஹுருமய கட்சியை சேர்ந்த வேவல்தூவே ஞானப்ரஹா தேரரை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜாதிக ஹெல ஹுருமய கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
நகர சபையின் முதலாவது இரண்டாவது அமர்வுகளை பகிஷ்கரித்து, அந்த தேரருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கையின் பின்னணியில் அரசாங்கத்தின் பிரபல நபர்களும் அவர்களுடன் தொடர்புள்ள அதிக வருப்பு வாக்குகளை பெற்றுள்ள நபர் ஒருவரும் இருப்பதாக அந்தக் கட்சி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
வேவல்தூவே ஞானப்ரஹா தேரரரை மேயர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு அந்த இடத்துக்கு தமது அரசியல் நண்பர் ஒருவரை நியமிப்பதற்கான அவசியமே இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளுககு காரணமாகும் என்று அந்தக் கட்சி மேலும் சுட்டிக்காட்டியுள்ளது
0 comments :
Post a Comment