நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்
புனித நோன்பை ஒரு மாத காலம் நோற்று விட்டு 'ஷவ்வால் மாத தலைப்பிறையைக் கண்டு இன்று (புதன் கிழமை) நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர். முஸ்லிம்களின் முதல் பெருநாளும் முக்கிய பெரு நாளுமாகிய 'ஈதுல் பித்ர்' நோன்புப் பெருநாள் சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, சாந்தியை, சமாதானத்தை ஏற்படுத்தும் உன்னத நாளாக விளங்குகிறது.
இன்றைய பெருநாள் தினத்திலே முஸ்லிம்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்திருந்து, குளித்து புத்தாடையணிந்து , நறுமணம் பூசி, இன்சுவை உணவுகள் உண்டு பின்னர் பள்ளிவாசல்களிலே ஒன்று கூடி தக்பீர் முழக்கம் செய்து இறைவனைப் புகழ்ந்து நன்றி செலுத்தி மகிழ்வர். பள்ளிவாசல்களிலே தமது சகோதரர்களுடன் தோளோடு தோள் சேர்த்து நின்று பெருநாள் தொழுகை தொழுது, பின்னர் ஒருவரோடு ஒருவர் கட்டித் தழுவி தமது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்வர்.
அதே போல், தமது உறவினர்,நண்பர்கள், அயலவர்கள் இல்லம் சென்று இவ்வாறே பெருநாள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர்.
நோன்புப் பெருநளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் எமது பெருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்..
ஈத் முபாரக்!!
கலாநெஞ்சன் ஷாஜஹான்
0 comments :
Post a Comment