நான்கு ஐ.தே.க. எம்.பிக்களுக்கு எதிராக நடவடிக்கை.
ஐக்கிய தேசிய கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, எதிர்வரும் தேர்தலுக்கு பின்னர் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க கட்சித் தலைவர் ரணில்விக்ரம சிங்க தீர்மானித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோசி சேனாநாயக்க, புத்திகபத்திரன, சுஜீவ சேனசிங்க, மற்றும் துனேஸ் கன்கந்த ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது
ஏற்கனவே இதற்கான தீர்மானத்தை கட்சியின் செயற்குழு மேற்கொண்டது.இதன் பொருட்டு முன்னாள் அமைச்சர் திலக் மாரபனவின் தலைமையில் ஒருநபர் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது.
தேர்தல் காலங்களில் அவர்கள் நால்வரும் ஒழுக்கவீன நடவடிக்கைகளில் ஈடுபட்டார்களா என அவர் ஆராய்வார் என தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment