நீர்கொழும்பு மாநகர சபை தேர்தல் பிரசாரம் ஆரம்பம்
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபை தேர்தலின் நீர்கொழும்பு மாநகர சபையின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசார வேலைகளை ஆரம்பித்துள்ளனர். விருப்பு வாக்குக்குக்குரிய இலக்கங்கள் வழங்கப்படாத நிலையில் பிரதான கட்சிகளினதும் சுயேட்சைக் குழுக்களினதும் வேட்பாளர்கள் பலர் நகரெங்கும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். இம் முறை பலத்த போட்டி காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மேயர் வேட்பாளராக தேர்தலில் குதித்துள்ள மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவர் ரொயிஸ் பெர்னாண்டோ உட்பட போட்டியிடும் வேட்பாளர்கள் சிலர் தமக்கு ஆதரவு திரட்டும் வகையில் வாகனமொன்றில் வீதி வலம் வரும் காட்சியை படத்தில் காண்கிறீர்கள்.
0 comments :
Post a Comment