இளைஞர்கள் இரவில் வீதிகளிள் பொல்லு கத்திகளுடன் திரிவதை தவிர்க்க வேன்டும்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலைமை தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரவீந்திர கரவிட்டகே தெரிவித்தார். இதன்மூலம் மட்டக்களப்பு மாவட்டதின் இயல்பு நிலையை பாதிக்கும் வகையில் செயற்படும் சட்டவிரோத குழுவினர் ஒரு சில தினங்களில் கைதுசெய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
இன்று திங்கட்கிழமை களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் உள்ள கிராமிய விழிப்புக்குழுக்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்த்தர்களை சந்தித்து பிரதேசத்தின் நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பாளர் பி.ஆர்.மானவடு தலைமையில் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் விஜயகுணவர்த்தன, மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரவீந்திர கரவிட்டகே, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் சுதாகரன், பிரதேச வைத்திய அதிகாரி டாக்டர் சுகுணன் உட்பட முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் இருக்க பொதுமக்கள் பொலிஸாருடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன் வதந்திகள் பரப்புவோர் குறித்த தகவல்களை பொலிஸ் நிலையத்துக்கு வழங்கமுடியும் என தெரிவிக்கப்பட்டதுடன் இளைஞர்கள் இரவு வேளைகளில் பொல்லு, கத்தியுடன் நடமாடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
பொலிஸார் தொடர்பில் பொதுமக்கள் சந்தேகம் கொள்ளாமல் பொலிஸார் மீது விசுவாசமாக நடந்துகொள்ளும்போதே புரிந்துணர்வுடன் செயற்படமுடியும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
செய்தியாளர்.ஜீனைட்.எம்.பஹத்
0 comments :
Post a Comment