அரசாங்க ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை இந்த வருட இறுதிக்குள் ஐந்து இலட்சத்தை தாண்டிவடும் என்று ஓய்வூதிய திணைக்களப் பணிப்பாளர் நாயகம் கே.ஏ. திலகரத்ன தெரிவித்துள்ளார். தற்போது ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை நான்கு இலட்சத்து 86 ஆயிரத்து 606 எனவும் இவர்களில் 75 ஆயிரம் பேர் முப்படைகளையும் சேர்ந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த வருட முதல் ஆறு மாத காலத்தோடு ஒப்பிடுகையில் இவ்வருட முதல் ஆறுமாத காலப் பகுதியில் ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை பத்தாயிரம் பேரினால் அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அரசாங்கம் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்காக வருடமொன்றுக்கு 1200 மில்லியன் ரூபாவினை செலவிடுவதாக ஓய்வூதிய திணைக்களம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment