Saturday, August 13, 2011

கொலை சந்தேக நபர்கள் அறுவருக்கு பிணை

நீர்கொழும்பு '60 ஏக்கர்' (அக்கரபணஹ) பிரதேசத்தில் வைத்து நபர் ஒருவரை இரும்புக் கம்பியினால் தாக்கியும் கூரிய ஆயுதங்களினால் வெட்டியும் கொலை செய்த சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் அறுவரை நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தலா 15 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா மூன்று இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
'60 ஏக்கர்' பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை ஒன்றை அடுத்து கொலை செய்யப்பட்டவராவார். .சந்தேக நபர்கள் அதே பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.
இக் கொலைச் சம்பவம் 2010, செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி இடம் பெற்றுள்ளது.

.......

No comments:

Post a Comment