உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய பாடசாலை மாணவர்களுக்கான இலவச போக்குவரத்து திட்டம் வெற்றியளிக்கவில்லை எனவும், பரீட்சைக்கு தோற்றிய எந்தவொரு மாணவரும் இலவசமாக பஸ்ஸில் பயணிப்பதற்காக அனுமதிக்கப்படவில்லை எனவும், தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்போது மாணவர்கள் எதிர்நோக்கிய அசௌகரியங்கள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவித்த கெமுனு விஜேரத்ன இதுதொடர்பாக உடனடி விசாரணை நடத்துமாறு எழுத்து மூலம் சம்பந்தப்பட்ட பஸ் உரிமையாளர் சங்கத்தினருக்கு அறிவித்துள்ளதாகவும், அவ்வாறு விசாரணை நடத்த தவறுகின்ற நிலையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பபிட்டார்.
எனினும் ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து உயர்தர மாணவர்களுக்கான இலவச போக்குவரத்து சேவை திட்டம் வெற்றிகரமாக அமைந்ததென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையானது கொழும்பு மாவட்டத்தில் 30 வீதம் வெற்றியளித்ததுடன், வெளி மாவட்டங்களில், கஷ்டப் பிரதேசங்களில் இந்த திட்டம் நூறு வீதம் வெற்றிகரமாக அமைந்ததாக அவர் கூறினார்.
No comments:
Post a Comment