எமது கட்சியை விலைக்கு வாங்க ஊடக நிறுவனத்திற்கு முடியாது. நான் ஜே.ஆர். ஐயவர்தனவுடன் பணியாற்றியவன். எனக்கு யாரும் அரசியல் போதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எதிர் கட்சித் தலைவர் ரணில் விக்ரம சிங்க நேற்று திங்கட்கிழமை இரவு டி.என்.எல். தொலைக்காட்சி சேவையில் இடம் பெற்ற நேரடி அரசியல் நிகழ்ச்சியொன்றில் பங்கு பற்றும் போது குறிப்பிட்டார்.
மஹாராஜா நிறுவனத்தின் தொலைக்காட்சி சேவையான 'சிரச' தொலைக் காட்சி சேவையில் தனக்கெதிராக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரசாரங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் டி..என்.எல். தொலைக்காட்சி சேவையின் 'ஜனஹன்ட' நேரடி அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்குபற்றி உரையாற்றுகையிலேயே எதிர் கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் எதிர் கட்சித் தலைவருடன் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவும் பங்கு பற்றினார்.
எதிர் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் மற்றும் நேயர்கள் தொலைபேசியூடாக கேட்ட கேள்விகளுக்கு தொடர்ந்து பதிலளிக்கையில் குறிப்பிட்டதாவது,
மஹாராஜா நிறுவனத்திற்கு எமது மொழி தொடர்பாக கதைப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது?. விபச்சாரிகள் என்ற சொல் எமது இலக்கியங்களிலும் அகராதிகளிலும் உள்ளன. நான் அந்த சொல்லை பயன்படுத்தியமை தொடர்பாக எனக்கெதிராக பொய் பிரசாரங்களை அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
பொதுத் தேர்தலின் போது என்னிடம் இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களை மஹாராஜா கேட்டார் நான் அதற்கு இணங்கவில்லை. அன்றிலிருந்து எனக்கெதிராக அவரின் ஊடக நிறுவனங்கள் மூலமாக போலிப் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.
மஹாராஜா நிறுவனத்தினர் ராஜபக்க்ஷ குடும்பத்தை போஷிக்கிறனர். அவர்களுக்கு ஆதரவாக மறைமுகமாக செயற்பட்டு வருகின்றனர்.
கொழும்பு மாநகர சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறும் என்று பயந்தே எனக்கெதிராக சிரஸ தொலைக்காட்சி செயற்படுகிறது.
எமது கட்சியின் தலைமைத்துவத்திற்கான பதவிக்காலம் அதிகரிக்கப்பட வேண்டும். எனது விருப்பமும் ஆலோசனையும் அதுவாகும். தலைமைத்துவத்திற்கான காலத்தை குறைத்தால் தலைமைத்துவத்திற்கு சிலர் அழுத்தம் கொடுப்பது அதிகமாகும். அந்த தலைவரினால் உறுதியுடன் செயற்பட முடியாமல் போகும் என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர நிகழ்ச்சில் கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டதாவது,
கட்சியொன்று வெற்றிகரமான கட்சியாக செயற்பட வேண்டுமாக இருந்தால் அங்கு ஒழுக்கநெறி பேணப்பட வேண்டும். தலைமைத்துவத்தை குறைக் கூறிக்கொண்டிருப்பதில் பயனில்லை. ஊழல் அற்ற அரசாங்கத்தை ரணில் விக்ரமசிங்கவினாலேயே அமைக்க முடியம் என்றார்.
It's pointless the condemning the leadership of the party,every member of the party should do his or her best to promote the values of the party."The change of leader is something like the same product but only a
ReplyDeletenew colourful wrapper".The politicians should know Now the voters are more intellligent and not a flock of ship. Breifly we could say
lacking of intergrity is the cause of UNP's downfall