இலங்கை விமானப்படை விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்கியது.
இந்திய விசாகப்பட்டனத்துக்குச் சென்று கொண்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளதுடன் அவது அவசர அவசரமாக சென்னையில் தரையிங்கியுள்ளது. 7 பேருடன் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனத்துக்குச் சென்று கொண்டிருந்த இவ்விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரப்பட்டதுடன் அவ்வனுமதி கிடைத்ததும் விமானம் எவ்வித பாதிப்புமின்றி சென்னையில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இவ்விமானத்தில் உள்ளவர்கள் பயிற்சிக்காக இந்தியா வந்திருந்தாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றது.
0 comments :
Post a Comment