இந்திய இராணுவ நடவடிக்கைகளை உளவு பார்க்கும் சீனக்கப்பல்.
இந்திய இராணுவத்தின் நடிவடிக்கைகளை சீனக் கப்பல் ஒன்று நான்கு மாதங்களுக்கு மேலாக உளவு பார்த்துவருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தியச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
அந்தமான், நிக்கோபர் தீவுகள் அருகே சீன உளவுக் கப்பல் ஒன்றின் நடமாட்டம் இருந்ததை இந்திய கடற்படையினர் கண்டறிந்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
இந்திய இராணுவ நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக மீன்பிடிக் கப்பல் போன்ற தோற்றத்தில், சுமார் 4 மாதங்களுக்கு முன்பு சீன உளவு கப்பல் உளவு பார்த்த சம்பவம் நடந்துள்ளது.
இந்திய ஏவுகணை பரிசோதனைகள் மற்றும் போர்க்கப்பல்களின் நடமாட்டங்கள் குறித்து கண்காணிப்பதற்காக அந்த கப்பல் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய கடல் எல்லைக்குள் இல்லாமல், சர்வதே கடற்பரப்பில் அந்தக் கப்பல் இருந்ததால் இந்திய கடற்படையால் நடவடிக்கை எதுவும் எடுக்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீப காலமாக வங்காள விரிகுடா மற்றும் இந்திய கடற்பரப்பைச் சுற்றிலும் சீன கடற்படையின் வருகை அதிகரித்துள்ளது.
தங்கள் நாட்டின் வர்த்தக நலன்களைப் பாதுகாக்கவே இவ்வாறு செய்வதாக சீன இராணுவம் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment