கடற்படை முகாமிலிருந்து ஆயுதத்துடன் தப்பியோடிய அதிகாரி கைது
மன்னார் கஜபா கடற்படை முகாமில் இருந்து ரி56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கான 120 ரவைகளுடனும் தப்பிச்சென்ற கடற்படை அதிகாரி ஒருவரை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர். தற்போது பொலிஸ் காவலில் உள்ள கடற்படை அதிகாரி ஏன் தனது பதவியினைவிட்டு ஆயுதத்துடன் தப்பிச் சென்றார் என அறியமுடியவில்லை என கடற்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கடற்படை தலைமையகத்தில் இருந்து மன்னார் கடற்படை முகாமுக்கு சென்ற கடற்படை அதிகாரிகள் குழுவொன்று விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளதாக கடற்படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment