Thursday, August 18, 2011

இலத்திரனியல் அடையாள அட்டைக்கு அங்கீகாரம்

இலத்திரனியல் அடையாள அட்டையினை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புதிய அடையாள அட்டைகளை பெற முதலில் விண்ணப்பிப்போருக்கான கட்டணங்கள் அறவிடப்படமாட்டாது எனவும் ஒரு குறிப்பிட்ட தொகை அடையாள அட்டைகள் விநியோகமானபின்னர் கட்டனங்கள் அறவிடப்படவுள்ளதாகவும் திணைக்கள வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

No comments:

Post a Comment