செய்மதி அலைவாங்கியை அனுமதியின்றி நாட்டிற்குள் கொண்டுவருவதற்கு தடை
தொலைத் தொடர்பு ஒழுங்கு படுத்தும் ஆணைக்குழுவின் அனுமதியின்றி செய்மதி தொலைக் காட்சியை பார்வையிடுவதற்கு பயன்படுத்தப்படும் செய்மதி அலைவாங்கியை(சட்டலைட் ரிசீவர்ஸ்) தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் அனுமதியின்றி நாட்டிற்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் உடனடியாக அமுலாகும் வகையில் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் சுங்கப் பணிப்பாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இதன்கீழ் இலங்கையில் ஒளிபரப்பு நடவடிக்கைகள் இடம்பெறாத மற்றும் முகவர் அமைப்புகள் அல்லாது தொலைக்காட்சி நிறுவனங்களின் செய்மதி அலைவாங்கியை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் அனுமதியின்றி நாட்டிற்கு கொண்டுவருவது தடை செய்யப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment