Wednesday, August 17, 2011

மர்ம மனிதனுக்கு பயந்து ஓடிய பெண் ரயிலில் மோதி உயிரிழப்பு

ஏறாவுர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பகுதியில் மர்ம மனிதன் ஒருவன் ஊடுருவிய தகவல் ஒன்றினையடுத்து பாதுகாப்பு தேடி ஓடிய பெண்ணின் மீது புகையிரதம் மோதியதில் அப்பெண் ஸ்தலத்திலேயே பலியானார் . வந்தாறுமூலை பலாச்சோலை ..பேச்சிக்கிராமம் பகுதியைச் சேர்ந்த எட்டுப்பிள்ளைகளின் தாயான ஆறுமுகம் பாக்கியம் என்ற பெண்ணே இவ்வாறு பலியாகியுள்ளார்.

மேற்படி பகுதியில் மர்ம மனிதன் ஊடுருவியுள்ளான் என்ற கதை பரவியதும் தனது பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு பாதுகாப்பு தேடி ஓடியபோது மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் மோதி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இதேநேரம் பொலிசாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் நல்லினக்கத்தை ஏற்படுத்தி மர்ம மனிதன் தொடர்பில் மக்கள் மத்தியில் உள்ள அச்சத்தையும் பீதியையும் போக்கும் பொருட்டு பொலிசாரின் கூட்டமொன்று நேற்று மாலை (16.8.2011) மட்டக்களப்பு தொழி நுட்பக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் நடாத்தப்பட்ட இக் கூட்டத்தில் மட்டக்களப்புக்கு இந்த வேலைத்திட்டத்திற்காக விஷேடமாக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர வருகை தந்து உரையாற்றினார்.

இக் கூட்டத்தில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் விஜேகுணவர்த்தன மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் கரவிட்டகே உட்பட உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள் ,கிராம உத்தியோகத்தர்கள், சிவில் பாதுகாப்பு குழுக்களின் பிரதி நிதிகள், ஊடகவியலாளர்கள், மதப்பிரமுகர்கள், கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தில் உரையாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர பிரபாகரன் செய்த கொடிய யுத்தம் தற்போது வெல்லப்பட்டுள்ளது தற்போது மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றார்கள் இப்படி இருக்கையில் புதியதொரு கிறிஸ் பூதம் ஒன்றினைக் உறுவாக்கி விட்டு மக்களை ஏமாற்றி பயமுறுத்து கிறார்கள் .

இவைசட்ட விரேதமாக ஆயுங்களை வைத்திருப்பவர்கள் மேற்கொள்ளலாம்| சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருப்பவர்களுக்கு அதனை ஒப்படைப்பதற்கு தற்போது கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது, இவ்வாறான சம்பவங்களை யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் இவைகள் அனைத்தும் அப்பட்டமான பொய் வாதந்திகள் எனக்கு ஜனாதிபதி அவர்களும் பாதுகாப்புச் செயலாளரும் பணித்ததின் பேரில் நான் இந்த மர்ம மனிதன் சம்மந்தமாக விளக்கமளிப்பதற்கு மட்டக்களப்புக்கு வந்துள்ளேன், இதனை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் பிரிவுகளிலு முள்ள பொதுமக்கள் அரச அதிகாரிகளுக்கும் விளகவுள்ளேன் எனத் தெறிவித்தார்.

No comments:

Post a Comment