ரணில் விக்ரமசிங்கவை துரத்தும் போராட்டம் உள்ளூராட்சி சபை தேர்தலின் பின்னராம்
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவடையும் வரையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கும் போராட்டம் தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியைப் புனரமைப்பு செய்யும் குழுவின் வட்டாரத்திலிருந்து தெரிய வந்துள்ளது.
இதன்படி கேம்ரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு முன்பாக நடத்தப்பட இருந்த சத்தியாக்கிரகப் போராட்டம் கைவிடப்பட்டுளள்ளதாக அந்த தகவல் மேலும் தெரிவிக்கிறது.
எப்படி இருந்த போதிலும் உள்ளூராட்சி சபை தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது ரணில் விக்ரமசிங்கவின் அணியினருடன் பிரசார நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை என்று சஜித் அணியினர் எடுத்துள்ள தீர்மானத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என தெரிய வருகிறது.
இதன்படி சஜித் அணியினர் வேறாக பிரசாரப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவடைந்தவுடன் ரணில் விக்ரமசிங்கவை கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கும் போராட்டம் தொடரும் என்று அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment