Saturday, August 13, 2011

கோப்பாயில் மர்மமானமுறையில் தொங்கிய சடலங்கள். சகோதரன் பொலிஸில் சரண்.

சகோதரியையும் கள்ளக்காதலனையும் கொலைசெய்து தொங்கவிட்ட சகோதரன் கோப்பாய் பொலிஸில் சரண்.

யாழ். கோப்பாய் பகுதியில் பனை மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் கடந்த புதன்கிழமை காலை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட இரு சடலங்களும் கொலைசெய்யப்பட்டு தொங்கவிடப்பட்டுள்ளன எனவும் இவர்களின் உடல்களில் உட்காயங்கள் பல காணப்படுவதாகவும் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேதப் பரிசோதனைகளை மேற்கொண்ட சட்ட மருத்துவ அதிகாரி வைத்தியர் சிவரூபன் தெவித்துள்ள நிலையில் கொலையை செய்த நபர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

வெள்ளவாய்க்கால் பகுதியிலுள்ள தோட்டக் காணியொன்றில் வளைந்த பனை மரமொன்றில் ஆணொருவரினதும் பெண்ணொருவரினதும் சடலங்கள் தூக்கில் தொங்கியவாறு காண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

உரும்பிராய் தெற்கு யோகபுரத்தைச் சேர்ந்த டிப்பர்ரக வாகன சாரதியான (வயது 43) என்பவரினதும் அதேயிடத்தைச் சேர்ந்த (வயது 24) என்பவரினதும் சடலங்களேயென அவை இனம்காணப்பட்டது.

இவ்விரு கொலைகளையும் செய்ததாக பொலிஸில் சரணடைந்துள்ள இளைஞன் கொலைசெய்யப்பட்ட பெண்ணின் சகோதரன் என தெரிய வந்துள்ளது.

குறிப்பிட்ட இரு சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டபோது முண்டியடித்துக் கொண்டு பீதியை கிளப்பும் விதத்தில் செய்திகைள வெளியிட்டிருந்த ஊடகங்கள் இதுவரை குறிப்பிட்ட இளைஞன் சரணடைந்த விடயத்தை இருட்டடிப்பு செய்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com