ஆப்கானில் தற்கொலை குண்டுதாரிகளாக பயன்படுத்தப்படவிருந்த சிறுவர்கள் மீட்பு
அண்மைகாலமாக ஆப்கானிஸ்தானில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் அதிரித்துள்ளதாக கூறப்படும் நிலையில் தற்கொலை குண்டுதாரிகளாக பயன்படுத்தப்படவிருந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுவர்களை ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறைந்த வயதுடைய சிறுவர்களை உடனடியாக பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி ஹமிட் ஹர்சாய் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏனையவர்கள் கல்வி மற்றும் ஒன்றிணைக்கும் திட்டங்கள் வழங்கப்பட்ட பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment