இலங்கையின் ஒருமைப்பாட்டினை பாதுகாப்பதற்கு சீனா ஒத்துழைப்பு வழங்கும் -சீனப் பிரதமர்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு சீன ஜனாதிபதி இன்று விசேட விருந்துபசாரம் அளித்தார்.ஜனாதிபதியின் சின விஜயத்தின் நான்காம் நாளான இன்று ஷென்ஷென் நகரில் விருந்துபசாரம் இடம்பெற்றது.சீன ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதி மற்றும் இரு நாடுகளினதும் பிரதிநிதிகள் இந்த விருந்து உபசாரத்தில் கலந்துகொண்டிருந்தனர்.இதன்போது இருநாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் சினேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டது.
இதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்று மாலை சீனப் பிரதமர் வென் ஜியாபாவோவை சந்தித்தார். பெய்ஜிங்கில் அமைந்துள்ள சீன பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர கூறினார்.
சர்வதேச மட்டத்தில் இலங்கையின் ஒருமைப்பாட்டினை பாதுகாப்பதற்காக அனைத்து சந்தர்ப்த்திலும் தமது ஒத்துழைப்பை வழங்குவதாக சீனப் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.
...............................
0 comments :
Post a Comment