பிரிவினவாதக் கட்சிகளை மீண்டும் பலமாக்க இந்தியா முயல்கிறது. விமல் சீற்றம்.
இலங்கையிலுள்ள பிரிவினைவாத அரசியல் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை இந்தியாவுக்கு அழைத்து அவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய அரசியல் தீர்வுத்திட்ட மாற்று யோசனைகளை தயாரித்து , அதனை இந்தியாவிலிருந்து இலங்கை மீது திணிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிகிறது என்று அமைச்சர் விமல் வீரவங்ச ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
அமைச்சர் விமல் வீரவங்ச அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டதாவது,
இந்தியாவின் உள்ளரங்கில் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. எத்தனையோ பிரிவினைவாத யுத்தங்கள் உள்ளன. அந்த பிரிவினைவாத யுத்தங்களை எப்படி சமாதானப்படுத்துவது என்று பார்க்காமல், எமது நாட்டில் யுத்தத்தால் தோற்கடிக்கப்பட்ட பிரிவினைவாத , இனவாத குழுக்களை ஒன்று சேர்த்து ஏன் மீண்டும் அவர்களுக்கு அரசியல் ரீதியில் முட்டுக் கொடுத்து பலப்படுத்தி 13 ஆவது அரசியல் தீர்வுத்திடத்திற்கு அப்பால் நாட்டை இட்டுச் செல்ல முயற்சிக்க வேண்டும் எனக் குமுறினார்.
1 comments :
Mr.Wimal Weerawamsa we agree with you,why not you organize or fight for a "united Srilanka" lack of unity of the country by the people or by the political parties is the cause
for unwelcome intruders to poke their noses into our matters.
Post a Comment