சிறுமியை வல்லுறவு புரிந்த நபர் கைது
சட்டரீதியான பாதுகாவலரிடமிருந்த சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது உடுதும்பர பொலிஸார் சந்தேக நபரை கைது செய்ததாக மையங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்செயலாக வந்த தொலைபேசி அழைப்பொன்றின் மூலமாக சந்தேக நபர் அறிமுகமானதாக சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்தன் பினபு; அந்த நபருடன் செல்வதற்கு தான் தீர்மானித்ததாக சிறுமி மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment