இலங்கை வான்பரப்பில் அமெரிக்க ஜெட் விமானங்கள் 10 அத்துமீறி பறந்தன என்ற செய்திகள் ஊடகங்களுடாக வெளிவந்தது. ஆனால் இது திட்டமிட்ட ஊடுருவல் அல்லவெனவும் வான்பரப்பில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானங்கள் தவறுதாலாக இலங்கையின் வான்பரப்பினுள் நுழைந்ததாகவும் இவற்றை ராடர்களில் கண்டுபிடித்த விமானப்படையினர் குறிப்பிட்ட விமானங்களுக்கு இலங்கை வான்பரப்பில் அனுமதியின்றி நுழைந்திருப்பது தொடர்பாக விளக்கியபோது அவர்கள் பாதையை மாற்றிக்கொண்டு சென்றுவிட்டதாகவும் விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளதுடன் இதன் பின்னணியில் நோக்கங்கள் ஏ தும் இருக்கக்கூடுமா என்ற வி சாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
அமெரிக்க யுத்த விமானங்கள் இலங்கை வான் பரப்பில் அத்துமீறி நுழைந்தமை குறித்து இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
இவ்விடயம் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:
அமெரிக்காவின் விமானமொன்று அநாவசியமான முறையில் இலங்கை வான் பரப்பில் நுழைந்துள்ளது. இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள விமானப்படை ஊடகப் பேச்சாளர், அத்துமீறி நுழைந்த அமெரிக்க விமானம் அறிவுறுத்தலின்பின் விலகிச் சென்றதாக தெரிவித்துள்ளார்.
எந்தவொரு நாட்டிற்கும் சொந்தமான வான் பரப்பை மீறுதல், விமானத்தை அநாவசியமாக உட்செலுத்தல் என்பவற்றிற்கு வேறு எந்தவொரு நாட்டிற்கும் அதிகாரம் இல்லை.
அது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்பதோடு இலங்கையின் இறைமைக்கு சவால் விடுக்கும் விடயமாகும். இதன்மூலம் அமெரிக்கா பாரிய குற்றம் இழைத்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணி அமெரிக்க அரசுக்கு தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது.
இந்த சம்பவத்தை ஊடகங்கள் மூலம் தெரிந்துகொண்ட இலங்கை மக்கள் பீதியடைந்துள்ளனர். அதுமட்டுமன்றி நாட்டை நேசிக்கும் அனைவரும் இங்கு நடைபெறுவது என்ன என திக்குமுக்காடிப்போயுள்ளனர். அது இயற்கையாகும்.
ஐக்கிய அமெரிக்க இராணுவத்திற்கு இலங்கை பூமி, கடல் மற்றும் வான் ஆகியவற்றை பயன்படுத்த இடமளித்தல் மற்றும் அதற்கென இலங்கை அரசு வசதி செய்து கொடுத்தல் தொடர்பிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கை ஒன்று 2007ம் ஆண்டு இலங்கை மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் செய்து கொள்ளப்பட்டது. அதற்கும் விமான அத்துமீறலுக்கும் தொடர்பு இருக்கின்றதா என சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால் சம்பவம் தொடர்பில் உடன் விசாரணை நடத்தி உண்மைத் தன்மையை வெளிக்கொணருமாறு மக்கள் விடுதலை முன்னணி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
They teach the principles of democracy to the whole world,but using power in an reasonable way by telling the world what to do and how
ReplyDeleteto do not listening the views or wishes of the other part of the world.