அரசியல் தஞ்சம் கோரி அவுஸ்திரேலியாவில் குடிபுகுந்துள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகள் சிலரை பொறுப்பேற்க நியூசிலாந்து இணக்கம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் உள்ள அகதி முகாம்களில் இருந்து, வருடாந்தம் 750 அகதிகளை கோட்டா முறையில் பொறுப்பேற்க தீர்மானித்துள்ளதாக நியூசிலாந்து கூறியுள்ளது.
ஆனால் இந்தோனேசியாவில் உள்ள 88 இலங்கை அகதிகளை பொறுப்பேற்க முடியாதென நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார். குறித்த 88 பேரும் நியூசிலாந்து நோக்கிதான் பயணித்தார்கள் என்பதற்கு எதுவித ஆதாரமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நியூசிலாந்தில் அகதி முகாம்களை நடத்திச் செல்லும் திட்டம் எதுவும் தம்மிடம் இல்லை என நியூசிலாந்து பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment