அவுஸ்திரேலியாவில் வீடொன்றில் தீ முண்டதில் 7 சிறுவர்கள் உட்பட 11 பேர் பலி.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகருக்கு அருகே உள்ள ஒரு வீட்டில் மூண்ட தீயில் சிறுவர்கள் 7 பேர் உள்பட 11 பேர் உயிரிழந்ததாக ஆஸ்திரேலியப் போலிசார் தெரிவித் துள்ளனர். லோகன் நகரில் உள்ள அந்த வீட்டில் தீப்பற்றியபோது இரு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அந்த வீட்டில் இருந்ததாகக் கூறப்பட்டது. வெடிப்பு சத்தமும் கூக்குரலும் கேட்டதைத் தொடர்ந்து தாங்கள் கண் விழித்ததாக அண்டை வீட்டார் கூறி யுள்ளனர்.
இரு மாடிகளைக் கொண்ட குடிசை வீட்டில் தீப்பற்றியதும் ஆண்கள் மூன்று பேர் எப்படியோ அங்கிருந்து தப்பியதாக உள்ளூர் தகவல்கள் கூறின. அந்த வீட்டின் தாழ்வாரத்திலிருந்து கீழே குதித்து உயிர் தப்பிய ஒருவர், தன் மனைவியும் இரு மகள்களும் அந்த வீட்டினுள் இருப்பதை பின்புதான் உணர்ந்திருக்கிறார். ஆனால் தீ மளமள வென்று பரவியதால் அவரால் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. தீப்பற்றியதற்கான காரணம் தெரியவில்லை. இது மோசமான தீ விபத்து என்றும் தீயை அணைக்க தாங்கள் மிகுந்த சிரமப்பட்டதாகவும் தீயணைப்பாளர்கள் கூறினர்.
0 comments :
Post a Comment