Sunday, August 28, 2011

அவசரகாலச் சட்டத்தை நீக்கியதனூடாக முகாம்களிலுள்ள 6000 பேரும் விடுதலையாகலாம்.

அவசரகால சட்டத்தை அகற்றியதன் காரணமாக ஏற்பட்டுள்ள முக்கிய பிரதிபலன் இச்சட்டத்தின் மூலம் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆறாயிரம் பேர் வரையானோர் விடுதலையாக இடமளிக்கப்பட்டுள்ளமையே என்று இடதுசாரி முன்னணயின் தலைவரும் அமைச்சருதான வாசு தேவ நாணயக்கார அறிக்கை விடுத்துள்ளதாக திவயின பத்திரிகை நேற்று தனது முன்பக்கத்தில் பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

உழைக்கும் மக்களின் உரிமையான சுவரொட்டி ஒட்டுதல், ஆர்ப்பாட்டம் செய்தல், ஊர்வலங்களில் ஈடுபடல் போன்றவைகளை இனிவரும் காலங்களில் அடக்க முடியாது. அவசரகால சட்டம் என்பது சாதாரண சட்டத்தை கைவிடுவதாகும். மேலும் அவசரகால சட்டத்தின் கீழ் அடிக்கடி சரத்துக்களை இணைப்பதற்கும் அகற்றுவதற்கும் முடியும். இவை வர்த்தமாணி மூலமாக இடம் பெறுகின்றன. இது தொடர்பாக பொது மக்கள் தேடி அறிந்து கொள்வது கடினமாகும்.

பயங்கரவாதத்தை ஒழிக்கும் சட்ட மூலம் நடைமுறையில் இருப்பதாக ஒருவர் விவாதிக்க முடியும். ஆனால் பயங்கரவாத ஒழிப்புச் சட்டம் அவசரகால சட்டத்தைவிட மிகவும் வரையறுக்கப்பட்டதாகும். அத்துடன் நீதிமன்றத்திற்கு கட்டுப்பட்டதாகும்.

அவசரகால சட்டத்தை அகற்றியதன் முக்கிய பிரதிபலனாக இருப்பது இச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 6000 பேர் வரையானோருக்கு விடுதலை பெற இடம் கிடைக்கின்றமையாகும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அறிக்கை விடுத்துள்ளதாக திவயின பத்திரிகையின் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment