Sunday, August 14, 2011

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 59 ஆயிரத்து 501 விதவைப் பெண்கள்

யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 59 ஆயிரத்து 501 விதவை பெண்கள் இருப்பதாக மகளிர் அலுவல்கள் அமைச்சர் திஸ்ஸ கரலியத்த பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதில் கிழக்கு மாகாணத்தில் 42565 பெண்களும் வடக்கில் 16936 பெண்களும் விதவைகளாக இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு விதவைகளாக காணப்படும் பெண்களுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் அபிவிருத்தி அமைச்சு , மீள் குடியேற்ற அமைச்சு , சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சு ஆகியவற்றினூடாக உதவிகள் பெற்றுக் கொடுக்க இருப்பதாகவும், நாட்டின் சகல பிரதேசச் செயலாளர் பிரிவும் உள்ளடங்கும் வகையில் பிரதேசத்தில் வசிக்கும் விதவைகள் தொடர்பாக கணிப்பீடு மேற்கொள்வதற்கு அமைச்சு ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற் கொண்டுள்ளதாகவும் அமைச்சர் பாராளுமன்றில் மேலும் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment