வெளிநாடுகளிலுள்ள தீவிரவாத குழுக்கள் இந்த அரசாங்கத்தை அல்லது அதிலிருக்கக்கூடிய ஒருசிலரை பழிவாங்கவேண்டுமென்ற குரோத மனப்பாண்மையே இந்த சனல் 4 வெளியீடுகளாகுமென தெரிவிக்கும் கே.பி இவ்வெளியீடுகளால் இங்குள்ள மக்களுக்கு எவ்வித நன்னையும் கிடைக்கப்போவதில்லை என தெரிவிக்கின்றார்.
அத்துடன் இருதரப்பிலும் தவறுகள் நிகழ்ந்திருக்கலாமென தான் நம்புவதாகவும் அனால் அவற்றின் பின்னால் சென்று பழிவாங்குவதால் மக்களுக்கு கிடைக்ககூடிய பயன் என்ன என்ற கேள்வியை எழுப்புதோடு, பழிவாங்குவதை விட ஒருவிடயத்தை மன்னிப்பதற்கு ஒருமனிதனுக்கு மிகுந்த பலம் வேண்டுமெனவும் மன்னிக்க தெரிந்தவனே பலசாலியெனவும் அந்த அடிப்படையில் வெளிநாடுகளிலிருந்து பழிவாங்கத்துடிப்போர் பலவீனமானவர்களாகவுள்ளார்கள் என தான் கருதுவதாகவும் தொவிக்கின்றார்.
தமிழ்மிரர் இணையத்திற்கு வழங்கியுள்ள செவ்வியில் மேற்காண்டவாறு தெரிவித்துள்ள அவர், இலங்கை வரலாற்றை எடுத்துப்பார்கின்றபோது, இந்நாட்டிலே சகல இனமக்களும் மிகவும் ஒன்றாக கூடி வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். கடந்தகாலங்களில் சில அரசியல்வாதிகள் தமது சுயலாபங்களுக்காக மேற்கொண்ட விடயங்களின் விளைவே கடந்த 30 ஆண்டு காலயுத்தமாகும் எனவும் அவற்றினை மக்கள் மறந்து விடவேண்டுமெனவும் கோருகின்றார்.
புலம் பெயர் நாடுகளிலுள்ள மக்களை சில குழுக்கள் தமது பிழைப்புக்காக இருட்டினுள் வைத்துள்ளனர். நான் இவர்களை பார்த்து கேட்கும் கேள்வியாதெனில் இவர்கள் இந்த மக்களுக்கு ஏதாவது செய்துள்ளார்களா? இவர்களுக்கு இந்த மக்களின் மீது அக்கறையுண்டாயின் அவர்கள் இங்குவந்து இங்குள்ள யதார்த்தத்தை புரிந்து மக்களுக்கு வேண்டியவற்றை செய்யவேண்டும் எனவும் சவால் விடுக்கின்றார்.
No comments:
Post a Comment