Monday, August 22, 2011

300 பாடசாலைகள் முதற்கட்டமாக அபிவிருத்தி.

கல்வி அமைச்சினால் ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2012 ம் ஆண்டு முதற் கட்டமாக நாடளாவிய ரீதியில் 300 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக திட்டப் பணிப்பாளர் அனுர திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.

இவ் முன்னோடித் திட்டத்திற்கென நாடளாவிய ரீதியில் உள்ள 96 கல்வி வலயங்களில் இருந்து பாடசாலைகள் தெரிவு செய்யப்படவுள்ளன என்றும் தரம் ஆறில் இருந்து க.பொ.த உ/த விஞ்ஞானப் பிரிவுகள் உள்ள பாடசாலைகள் இம் முதலாம் கட்டத்தில் உள்வாங்கப்படவுள்ளன என்றும் மாணவர் அனுமதிக்கென நகரப்புற பாடசாலைகளை நாடிவரும் நிலைமையை மாற்றி கிராமப் புறத்திலுள்ள பாடசாலைகளுக்கு சகல வசதிகளையும் வழங்கி மாணவர் அனுமதியை அதிகரிப்பதே ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் நோக்கமாகும் என்றும் அனுர திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தில் உள்ளெடுக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் 2012 ம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிக்காத பாடசாலைகள் இரண்டாம் கட்டத்தில் உள்ளெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment