Tuesday, August 23, 2011

லிபியத் தலைநகர் கிளர்ச்சியாளர் வசம், கடாபி தலைமறைவு, 3 மகன்களும் கைது.

இறுதிக்கட்ட யுத்தம் தீவிரம், சரனடைந்தால் பொது மன்னிப்பு என்றும் அறிவிப்பு.
லிபியத் தலைநகர் திரிபோலிக்குள் இரவோடிரவாக ஊடுருவி உக்கிர தாக்குதல்களை நடாத்தியுள்ள கிளர்ச்சியாளர்களின் படைகள் அந்நகரின் பெரும்பகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளன. நேட்டோ படையினரின் துணையுடன் போராடும் கிளர்ச்சியாளர்களிடம் லிபியத்தலைவர் கேணல் கடாபி தோல்வியை தழுவுவார் என எதிர்பார்கப்பட்ட போதிலும், ஓர் இரவுக்குள் அது நிறைவேறியமை உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்நலையில் கடாபியின் கட்டிட வளாகத்தை சூழ்ந்துள்ள படையினர் தொடர்ந்துகடும் தாக்குதல்களை நடாத்தி வருகின்றனர். இந்த அதிரடி தாக்குதல்களை சிறிதும் எதிர்பாத்திராத கடாபி தனக்கு விசுவாசமான படையினரை கைவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

அதே சமயம் கடாபியின் இரண்டு மகன்மாரை கிளர்ச்சியாளர்கள் கைது
செய்துள்ளதுடன், மூன்றாவது மகன் தானாக முன்வந்து சரனடைந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

1 comments :

Anonymous ,  August 23, 2011 at 9:04 PM  

Now battle for future Libya really begins.Let the people who supported
for the destruction of Libya enjoy,
because they can easily handle the wealth of the country in future,what they were waiting for.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com