Sunday, August 28, 2011

அல் கொய்தாவின் நம்பர் 2 தலைவர் அதியா அப்த் அல் ரஹ்மான் பலி

அல் கொய்தா அமைப்பின் 2ம் நிலை தலைவரான அதியா அப்த் அல் ரஹ்மான் பாகிஸ்தானின் வசிரிஸ்தான் பகுதியில், அமெரிக்ப் படையினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இரு நாட்டு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட் ரஹ்மான் அல் கொய்தாவின் முக்கியத் தலைவர்.அந்த அமைப்பின் தலைவர் ஈமான் அல் ஜவாஹிரிக்கு அடுத்த இடத்தி்ல இருந்தவர். இவரது மரணம், அல் கொய்தாவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

ஏற்கனவே அல் கொய்தா தலைவர் பின்லேடனைக் கொன்று விட்ட அமெரிக்காவுக்கு இது இன்னொரு உற்சாக செய்தியாக அமைந்துள்ளது.

வசிரிஸ்தானில் கடந்த திங்கள்கிழமை நடந்த ஏவுகணைத் தாக்குதலின்போது ரஹ்மான் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மச்சி கேல் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

லிபியாவைச் சேர்ந்தவர் ரஹ்மான். அல் கொய்தா தலைவர் அல் ஜவாஹிரிக்கு அடுத்த இடத்தில் இருந்து வந்தவர். இருப்பினும் ஜவாஹிரி அளவுக்கோ அல்லது பின்லேடன் அளவுக்கோ உலகப் புகழ் பெற்றவர் அல்ல இவர். அதேசமயம், அல் கொய்தா அமைப்பின் மிக மூத்த தலைவர்களில் ஒருவர். வெளியுலகுக்கு அதிகம் இவரைத் தெரியாது. நிர்வாகத் திறமை அதிகம் கொண்டவர்.

சோவியத் யூனியனுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் போராடி வந்தபோது பின்லேடனுடன் டீன் ஏஜ் இளைஞராக சேர்ந்து போராட்டத்தில் குதித்தவர் ரஹ்மான். பின்லேடனின் தூதுவராக ஒருமுறை இவர் செயல்பட்டுள்ளார். ஈரானுக்கான தூதராக இவரை வைத்திருந்தார் பின்லேடன். இதன் மூலம் ஈரானுக்குள் படு சுதந்திரமாக போய் வர ரஹ்மானுக்கு ஈரான் அனுமதி அளித்திருந்தது. பின்லேடனிடம் நல்ல செல்வாக்குடன் திகழ்ந்து வந்த ரஹ்மான், அல் கொய்தா அமைப்பில் நிறைந்த அனுபவம் கொண்டவர். இதனால்தான் இவரை வைத்து அல் கொய்தாவை நிர்வகித்து வந்தார் ஜவாஹிரி.

No comments:

Post a Comment