189 மருந்தகங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்- சுகாதார அமைச்சு
தேசிய ஓளடதங்கள் மற்றும் வாசனைத் திரவியங்கள் சட்டத்தை மீறும் வகையில் மக்களுக்கு மருந்து வகைகளை விற்பனை செய்யும் மருந்தகங்களை சுற்றிவளைப்பதற்கான நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் மைத்திரி பால சிறிசேன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த எட்டு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்ளப்படாமை, அனுமதிப் பத்திரங்கள் புதிப்பிக்கப்படாமை, மருத்துவர்களின் பரிந்துரைகள் இன்றி மருந்து விநியோகிக்கப்பட்டமை, உரிய வெப்பநிலையின் கீழ் ஊசி மருந்துகள் களஞ்சியப்படுத்தப்படாமை மற்றும் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படும் போது மருந்தாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருக்காமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் 189 மருந்தகங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
0 comments :
Post a Comment