கடாபியின் தலைக்கு விலை 1.7 அமெரிக்க டொலர்கள்.
லிபிய அதிபர் கடாபிக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் கிளர்ச்சியாளர்கள் தொடங்கிய சண்டை, கடந்த 22ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தலைநகர் திரிபோலியை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளனர். ஆனால், கடாபி தலைமறைவாகி விட்டார். இந்நிலையில், கேணல் முஅம்மர் கடாயினை கொன்று அல்லது உயிருடன் பிடிப்போருக்கு 1.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என லிபிய கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
கடாபியை பிடிப்போருக்கு பென்ஹாசியிலுள்ள வர்த்தர் ஒருவரும் 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக கூறியுள்ளதாக லிபிய மாற்றத்திற்கான பேரவையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கடாபிக்கும் அமைச்சரை அமைச்சர்களுக்கும் இடையிலான தொடர்புகள் அற்று போயுள்ளதாக லிபிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடாபியின் கட்டுப்பாட்டில் இருந்த 95 வீதமான பகுதிகளை தாம் கைப்பற்றியுள்ளதாக கிளர்ச்சியாளர்களின் இராணுவ பேச்சாளர் வெளிநாட்டு செய்தி சேவையொன்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முடக்கப்பட்ட லிபியாவின் சொத்துக்களை விடுவிப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு பேரவையில் இந்த வாரத்திற்குள் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது.
1 comments :
Rebel's announcement of 1.7 millions American dollars for Col Gadaffi's
head is not a matter that we can appreciate,but now the real fight for the future Libya begins,the results would be unpredictable and
unimaginable.The people behind the
scene,the opportunists may be having a "Gala time" in future.
Post a Comment