Tuesday, August 9, 2011

லண்டனில் தொடரும் கலவரம் - 160 பேர் கைது

பிரிட்டன் தலைநகர் லண்டனில், டோட்டன்ஹாம் பகுதியில் ஆப்பிரிக்க கரீபிய சமுதாயத்தை சேர்ந்த ஒரு இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதை எதிர்த்து நடந்த கலவரத்தின் தொடர்ச்சியாக, நகரின் பல்வேறு இடங்களில், கொள்ளை, மோதல்கள் தொடர் கதையாகியுள்ளன. இதுவரையிலும், 160 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லண்டனில் பல்வேறு இடங்களில் கடைகள் சூறையாடப்பட்டன. டோட்டன்ஹாம் நகரில் தொடங்கிய கலவரம் பிரிக்ஸ்டன், என்பீல்டு, டால்ஸ்டன், இஸ்லிங்டன் ஆகிய பகுதிகளுக்கும் பரவியது.

என்பீல்டு, பிரிக்ஸ்டன் ஆகிய பகுதிகளில் பல இடங்களில் கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. போலீசாருடன் மோதலும் பல இடங்களில் நடந்தன. இந்த கலவரம் தொடர்பாக 160 பேர் கைது செய்யப்பட்டனர்.


1 comments :

Anonymous ,  August 9, 2011 at 8:48 PM  

London is burning,it's really a serious issue.The reasons behind this
could be very deeper.Grown up youngsters are without jobs, without any job training just roaming,finncial difficulties among the families,lack of education about the precious values,but it is regrettable some politicians are keen
about handling about other countries internal matters.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com