கனடாவின் போய்ங் 737 ரக ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நான்கு விமான பணியாளர்கள் உட்பட 15 பேர் குறித்த விமானத்தில் பயணித்ததாக கனேடிய பொலிஸாரை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
குறித்த பகுதிகளில் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கனேடிய படையினர் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ முடியும் என அந்த நாட்டு தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
காயமடைந்தவர்களின் தற்போதைய நிலைமைகள் குறித்து இதுவரை விபரங்களை வெளியிடாத பொலிஸார், விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment