மாணவர்களுக்கு ஆபாஷப் படங்கள் காண்பித்த இருவருக்கு 10 ஆயிரம் ருபா அபராதம்
பாடசாலை மாணவர்களுக்கு இணையத்தளத்தினுடாக ஆபாஷப் படங்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளித்த குற்றச்சாட்டின் பேரில் ஹோமாகம நகர மத்தியில் நடத்தப்பட்டு வந்த தொலைத் தெடர்பாடல் நிலையமொன்றின் உரிமையாளர்கள் இருவரை ஹோமாகம மேலதிக நிதவான் சுமித் பெரேரா கடுமையாக எச்சரித்ததுடன் பிரதிவாதிகள் இருவருக்கும் தலா ஐயாயிரம் ருபா அபாராதமாக விதித்தார்.
குறிப்பிட்ட தொலைத் தெடர்பாடல் நிலையத்தில் இணையத்தளத்தினுடாக ஆபாஷப் படங்கள் பார்த்துக் கொண்டிருந்த பத்து மாணவர்களுடன் தெடர்பாடல் நிலையத்தின் உரிமையாளர்கள் இருவரையும் ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை பொலிஸ் நிலையம் அழைத்து, தமது பிள்ளைகள் தொடர்பில் தொடர்ச்சியாக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியதுடன், மாணவர்களிடம் தமது பெற்றோரை வணங்கி மன்னிப்பு கேட்குமாறு பணித்ததுடன், மாணவர்களின் வயதை கருத்திற் கொண்டு அவர்களை விடுவிப்பதற்கு ஹோமாகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நடவடிக்கை எடுத்தார்.
0 comments :
Post a Comment