TNAக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தை எதிர்வரும் புதன்கிழமை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான 9வது சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது. அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையிலான 8வது சுற்றுப் பேச்சுவார்த்தை கடந்த புதன்கிழமை நடைபெற்றிருந்தது. 8வது சுற்றுப் பேச்சுவார்த்தையில் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக அமுல்படுத்தப்பட வேண்டிய முக்கிய விளக்கங்கள் அடங்கிய எழுத்துமூல ஆவணம் கையளிக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அச்சுற்றில் அரசாங்கப் பிரதிநிதிகள் தம்மிடம் எந்தவிதமான எழுத்து மூல ஆவணமும் கையளிக்கப்படவில்லையெனக் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment