ரிஸாணாவை விடுவிப்பதற்கு இழப்பீடு செலுத்த அரசாங்கம் தயார்- அமைச்சர் டிலான்
சவூதி ஆரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரிஸாணா நஃபீக்கை விடுவிப்பதற்கு உயிருக்கான இழப்பீடாக எவ்வளவு தொகையை ஏனும் செலுத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது என வெளிநாட்டு ஊக்கு விப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் தெரிவிக்கின்றார்
ரிஸானா நஃபீக் மீதான மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை நிறுத்துவதற்காக ஜனாதினதி தலையீடு செய்த போதிலும், சவூதி அரேபிய சட்டத்தின் பிரகாரமே உயிரைக்காப்பாற்ற முடியுமென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் குமார பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த போததே அமைச்சர் டிலான் பெரேரா இந்த கருத்தினை கூறினார்
0 comments :
Post a Comment