தெற்கு சூடான் இன்று தனி நாடாகிறது
ஆப்பிரிக்காவில கடந்த 50வருடங்களாக விடுதலை கோரிப் போராடிய தெற்கு சூடான் இன்று இரு நாடுகளாக பிரிக்கப்பட்டு தெற்கு சூடான் இன்று தனி நாடாகிறது.தெற்கு சூடானின் தலை நகராக ஜுபா அங்கீகரிக்கப்பட்டு உலகம் முழுவதிலும் உள்ள தலைவர்களின் பங்கேற்றலுடன் இன்று சுதந்திர தினவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுகின்றது.
கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலையீட்டின் பேரில் சூடானை இரண்டாக பிரித்து தெற்கு சூடானாக அமைக்க தீர்மானம் எடுக்கப்பட்டது இதை தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில் பெருமளவான மக்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்ததையடுத்து தெற்கு சூடான் என்ற புதிய நாடு இன்று உதயமாகிறது.
இது ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்ட 193-வது நாடாவதுடன் ஆப்பிரிக்கா கண்டத்தின் 54-வது நாடு என்ற பெருமையை பெறுகிறது.
கடந்த 50 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டு யுத்தத்தில் 2 லட்சம் பேர் பலியாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment