ஐரோப்பிய நாடுகள் மீது நாம் படையெடுப்போம் - கடாபி எச்சரிக்கை
நேட்டோ படைகள் லிபியா மீதான தாக்குதல்களை உடணடியாக நிறுத்தாவிடில், ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல்களை மேற்கொள்வோம் என லிபிய அதிபர் கடாபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.நேற்று வெள்ளிக்கிழமை திரிபொலியின் மத்திய சதுக்கத்தில் கூடியகடாபியின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்னிலையில் அவருடைய ஒலிப்பதிவு அடங்கிய நாடா ஒலிபரப்ப பட்டது. அதில் அவர் தெரிவிக்கையில், நேட்டோ படைகள் நம் பொதுமக்களின் குடியிருப்புக்களை குறிவைத்து தாக்குதகளை நடத்துகின்றன. இதை உடனடியாக அவர்கள் நிறுத்தாவிடில் ஐரோப்பாவை நோக்கி தாக்குதல்களை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார்
கடாபி மீதும், அவரது மகன் சைஃப்; மீதும் சர்வதேச குற்ற நீதிவியல் மன்றத்தில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட ஒரு சில நாட்களுக்குள் கடாபி இப்படி அறிவித்திருக்கிறார்.
0 comments :
Post a Comment