Sunday, July 3, 2011

தாவுவதற்கு தயார் நிலையில் இருகுரங்குகள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அரசுடன் இணைந்து கொள்வதற்காக அரசின் பின்கதவு வாயிலில் தவம் கிடக்கின்றனர் என்பது தொடர்சியாக கசிந்து கொண்டிருக்கும் தகவல்கள். ஆனால் அரசியல்வாதி ஒருவர் அல்லது பிரஜை ஒருவர் தான்விரும்பிய கட்சியில் இணைந்து கொள்வது அல்லது ஆதரிப்பது ஒன்றும் தவறு அல்ல மாறக அது அவர்களின் உரிமையும்கூட. அனால் அவர்கள் தமது கட்சித்தாவலுக்கு சோடிக்கும் கதைகளே ஜனநாயக விரோதமாக கொள்ளப்படுகின்றது.

இதன் அடிப்படையில் அண்மையில் அரசுடன் இணைந்து கொள்ள திட்டமிட்டுள்ள சரவணபவான் , சிறிதரன் ஆகியோர் தமது இணைவை நியாயப்படுத்துவதற்காக தற்போதே கதைகளை கசியவிட்டுள்ளனர். எவ்வாறெனின், அரசாங்கம் தம்மை போலிக்குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்து துன்புறுத்த முயல்வதாகவும் அதிலிருந்து மீள்வதற்காக தாம் கட்சித்தாவலுக்கு நிர்பந்திக்கப்படுவதாகவும் கதைகள் ஊடகங்களுடாக பரவ விடப்படுகின்றன.

அண்மையில் ஊடகமொன்றில் வெளிவிந்த செய்தியில் த.தே. கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபன், எஸ்.சிறிதரன் ஆகிய இருவரையும் அரசுடன் இணைத்துக்கொள்ளும் நோக்கில் ஜனாதிபதியின் விசேட உத்தரவின் பேரில் இவர்களுக்கு எதிராக சுங்க, பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிதரன் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினராக செயற்பட்ட தீபனின் நெருங்கிய உறவினரெனவும் இந்த உறவு முறையின் அடிப்படையில் சிறிதரன் எம்.பி, பாடசாலை மாணவர்களை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைவதற்கு அழுத்தம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிதரன் தீபனின் உறவினர் என்பதற்காக அவர் கைது செய்யப்படலாம் என சிறிதரன் தரப்பினரின் அனுதாபத்தேடலாகவே காணப்படுகின்றது. இலங்கையின் தமிழ் பிரஜைகள் என எடுத்துக்கொண்டால் 90 வீதமானவர்களுக்கு புலிகள் அமைப்பில் உறவினர்கள் இருந்துள்ளனர். ஏனவே அந்த 90 வீதத்தினரும் உறவினர்கள் புலி உறுப்பினர் என்பதற்காக கைது செய்யப்படவில்லை. அத்துடன் அதற்கான இடம் சட்டத்திலும் இல்லை.

ஆனால் சிறிதரன் கிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியராகவிருந்தபோது தனது பாடசாலைக்கு கல்வி பயில வந்த மாணவர்களை புலிகளியக்கத்தில் இணையுமாறு நிர்பந்தித்திருந்தால் அல்லது புலிகளின் ஆட்சேர்ப்புக்கு உதவியிருந்தால் அவர் குற்றவாளியே. குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.

அதேபோல், உதயன் பத்திரிகையின் உரிமையாளரான ஈ.சரவணபவன், பத்திரிகை அச்சுப் பணிகளுக்காக காகித இறக்குமதியின் போது சுங்க வரி செலுத்தவில்லை என்றவொரு குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கெதிராக சுங்கப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் கைது செய்யப்படலாம் எனவும் செய்தி தெரிவிக்கின்றது.

நாட்டின் நடைமுறைகளை மீறி சரவணபவான் செயற்பட்டிருந்தாரானால் தண்டிக்கப்படவேண்டும்.

ஆனால் ஆழும் கட்சியுடன் இணைந்து கொண்டால் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்ற எதிர்பார்பில் கட்சிதாவ முனையும் இவர்கள் மேலும் மக்களை ஏமாற்றும் நோக்கில் தொடர்ந்தும் புனைக்கதைகளை பரப்பி வருகின்றனர்.

இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுகின்றது, எம்மை நாடாளுமன்று அனுப்புங்கள் நாம் பாராளுமன்றில் நியாயம் கேட்கப்போகின்றோமென மக்களின் வாக்கினை பெற்றுக்கொண்டவர்கள் தற்போது தங்கள் குற்றங்கள் நிரூபிக்கப்படவிருக்கும்போது தம்மை காத்துக்கொள்வதற்காக மக்களை தொடர்ந்து ஏமாற்ற முனைகின்றனர்.

1 comments :

Anonymous ,  July 4, 2011 at 8:17 PM  

Opportunism is a behaviour among some poeple to practice of using situations unfairly to gain advantage
without thinking how their actions
will affect the other people.Fake political designers are a curse to the society.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com