Thursday, July 7, 2011

இரட்டை பிரஜாவுரிமை கேட்டு மூக்குடைபட்டார் முன்னாள் பா.உ ஜனா .

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் பா.உ ஜனா எனப்படும் எம்.கருணாகரன் தற்போது பிரித்தானியாவில் வாழ்கின்றார். இவர் அண்மையில் இலங்கைவந்து இலங்கையின் பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை புலனாய்வுத்துறையின் பிரதம அதிகாரியின் செல்வாக்கினை பெறச்சென்று வாங்கிக்கட்டியதாக அறியமுடிகின்றது.

இலங்கையில் இந்திய இராணுவம் தங்கியிருந்தபோது இடம்பெற்ற பொதுத்தேர்தல் ஒன்றில் ரெலோ சார்பாக போட்டியிட்டு பாராளுமன்று சென்ற இவர் பின்னர் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சமடைந்து தற்போது பிரித்தானிய பிரஜையாகவுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ரெலோ இணைந்துள்ள நிலையில் , எதிர்வரும் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் களம்மிறங்கும் நோக்கில் இலங்கை சென்றுள்ள இவர், வேண்டாம் என்று தூக்கியெறித்த பிரஜாவுரிமையை மீண்டும் பெறச்சென்று இலங்கையில் குறிப்பிட்ட அதிகாரியிடம் வாங்கிக்கட்டியதாக ரெலோவின் முக்கிய புள்ளியொன்றிடமிருந்து இலங்கைநெற் க்கு தெரியவந்தது.

ரெலோ அமைப்பு புலிப்பயங்கரவாதிகளை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றிருந்தனர். ஆனால் ரெலோவின் இக்கொள்கையை அனைவரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை வெளிக்காட்டுவதற்காக ஒருசிலரால் சிறிரெலோ எனும் ஒர் பிரிவு உருவாக்கப்பட்டது. அப்பிரிவின் தலைவராக உதயராசா என்பவர் உள்ளார். நேற்று மேற்படி உதயராசாவுடனயே ஜனா குறிப்பிட்ட அதிகாரியை சந்தித்துள்ளார். சந்திப்பின்போது மிகவும் காத்திரமான கேள்விளை ஜானா விடம் அவ்வதிகாரி கேட்டுள்ளார்.

இலங்கையில் வாழமுடியாது என பிற நாடு ஒன்றில் அரசியல் தஞ்சம் புகுந்த நீங்கள் தற்போது இலங்கையில் மீண்டும் பிரஜாவுரிமை கேட்டு வந்துள்ளீர்கள், வரவேற்கின்றோம். அதாவது தற்போது உங்களுக்கு நீங்கள் வாழும் நாடான பிரித்தானியாவை விட இலங்கையில் சௌகரியமாக வாழமுடியும் என்பதை உணர்ந்துள்ளீர்கள். அவ்வாறாயின் இவ்விடயத்தினை புலம்பெயர் தேசத்திலுள்ள மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க முடியுமா? என குறிப்பிட்ட அதிகாரி ஜனாவை கேட்டபோது அதற்கு ஜனா மறுப்பு தெரிவித்ததுடன் தான் புலிகளை ஒருபோதும் ஆதரிக்கவில்லை எனவும் தான் லண்டனில் வசிக்கும் பிரதேசத்திலுள்ள மக்களும் அவ்வாறு புலிகளை ஆதரிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளதுடன் பயம் காரணமாக புலிகளின் அராஜகங்களை தட்டிக்கேட்கச் செல்லவில்லை எனக் கூறியுள்ளார்.

அவ்வாறாயின் தற்போது புலிகள் அமைப்பு இங்கு அழிக்கப்பட்டுள்ளது, புலம்பெயர் தேசத்திலுள்ள சில புலிப்பினாமிகள் தமிழ் மக்களை தொடர்ந்து தவறான வழிக்கு கொண்டுசெல்ல முனைகின்றனர். மக்களுக்கு சரியான பாதையை காட்டவேண்டிய கடமை உங்களுக்கு உண்டு. அதை செய்ய முடியுமா? என அதிகாரி கேட்டபோது அதற்கும் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

நீங்கள் பிரஜாவுரிமைக்காக விண்ணப்பிக்கலாம், அது உரிய அதிகாரிகளால் பரிசீலிக்கப்படும், சென்றுவாருங்கள் என அனுப்பி வைக்கப்பட்டதாக அறியமுடிகின்றது.

தொடர்ந்து மக்களின் முதுகில் பயணம் செய்யவிரும்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதன் அங்கத்துவக் கட்சிகளும் தமிழ் மக்களை மாயையினுள் வைத்துக்கொண்டு அரசாங்கத்திடம் பின்கதவால் சென்று தமக்கு தேவையானவற்றை சாதித்துக்கொள்கின்றனர் என்பதற்கு இதுவும் உதாரணமாகும்.

இங்கு குறிப்பிடவேண்டிய விடயம் யாதெனில், புலம்பெயர் நாடுகளிலிருந்து இந்திய புலனாய்வுதுறையின் நிகழ்சிநிரலின்கீழ் செயற்படும் முன்னாள் ரெலோ உறுப்பினர்கள் சிலர் அண்மையில் இலங்கை சென்று கட்சியை மீண்டும் கட்டியெழும்பும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளனர் என்ற செய்திகள் வெளியாகியிருந்தது. இச்செயற்பாடுகளின் பின்னணி , நோக்கம் , நிகழ்சிநிரல் தொடர்பாக வெகு விரைவில் மக்களுக்கு தெளிவுபடுத்தப்படும்.

1 comments :

Anonymous ,  July 8, 2011 at 11:06 AM  

This is what happening for years and years,until the tamil citizens
realize the reality the true situation and problem exit in our political life,the dramas will go on
for another century.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com