மொழிக்கொள்கையை மீறும் அரச நிறுவனங்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். சில அரச நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் சட்டத்திற்கு அமைவாக ஸ்தாபிக்கப்பட்ட சபைகள் இன்னும் சுற்றறிக்கைகளை சிங்கள மொழியில் மாத்திரம் தயாரிப்பதால் வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலுள்ள அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாக்கப்படுகிறார்கள்.
இந்நிலைமையை மாற்றிக் குறைந்தது சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் மாத்திரமேனும் சுற்றறிக்கைகள் மற்றும் கடிதங்களைத் தயாரிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தும் இதனைக் கவனத்தில் கொள்ளாது செயற்படுதல் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பல தடவைகள் கூறியும் அரச கரும மொழிக் கொள்கையை மீறிச் செயற்படும் அனைத்து அரச நிறுவனங்களுக்கு எதிராகவும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment