பிரதேச பொலிஸாரின் ஆதரவுடனே பொலிஸ் சேவையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்
பிரதேச பொலிஸ் அதிகாரிகளின் ஆதரவை பெறுவதன் ழூலமே புதிய பொலிஸ் மா அதிபர் பொலிஸ் சேவையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுதெரிவித்துள்ளது
இதற்கமைய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களின் ஆதரவை பெற்றுக்கொள்வது குறித்து பொலிஸ் மாஅதிபர் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்று ஆணைக்குழுவின் கொள்கை வகுப்பு பணிப்பாளர் பெசில் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ள அவர் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இடம் பெறும் சம்பவங்களை கண்காணிக்கும் அதிகாரம் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களிடம் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
குறிப்பாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளின் கடமைகள், நாளாந்த பொலிஸ் விசாரணைகளின் முன்னேற்றம், பொலிஸ் குறிப்பேடுகளின் தன்மை ஆகிய விடயங்களை கண்காணிக்கும் அதிகாரம் உதவிபொலிஸ் அத்தியட்சகர்களிடமே உள்ளதாக பெசில் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இலங்கை பொலிஸ் துறையை உரிய வழிக்குக் கொண்டு வருவதாயின், உதவி பொலிஸ் அத்தியட்சகர்களை சட்ட வரையறைக்குள் கொண்டு வருவதுடன், பொலிஸ் துறையை அவர்களின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவதன் மூலம் மாத்திரமே குற்றச்செயல்களை தடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொலிஸ் நிலையங்களுக்குள் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலமே நாடு முழுவதும் இடம்பெறுகின்ற பாரியளவிலான குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
0 comments :
Post a Comment