Tuesday, July 5, 2011

சனி கிரகத்தில் வெந்நீர் ஊற்றுகளும், ஐஸ் கட்டிகளும் உள்ளன- விஞ்ஞானிகள்

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சனி கிரகத்தில் விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது அங்கு வெந்நீர் ஊற்றுகளும், ஐஸ் கட்டிகளும் இருப்பதை கண்டறிந்தனர்.இந்நிலையில் ஜெர்மனியைச்சேர்ந்த ஹெய் டெல்பெர்க் பல்கலைக்கழக வானவியல் விஞ்ஞானி பிராங்க் போஸ்ட் பெர்க் தலைமையில் நிபுணர்கள் அந்த நீர் ஊற்றுகள் அங்குள்ள ஏரியிலிருந்து உற்பத்தி ஆவதாக கண்டுபிடித்துள்ளனர். இதற்கு முன்பு என்செலாடஸ் சந்திரனில் இருக்கும் ஐஸ் படிவங்களை நாசா விண்வெளி மையத்தின் காசினி விண்கலம் போட்டோ எடுத்து அனுப்பியது. அதன் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் அந்த ஐஸ் கட்டியில் அதிகளவு உப்பு படிவங்கள் இருப்பதை விஞ்ஞானி பிராங்க் போஸ்ட் பெர்க் தலைமையிலான நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
எனவே இங்கு உப்பு நீர் ஏரி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த உப்பு படிவங்களில் 30 சதவீதம் என்செலாடஸ் சந்திரனின் நீரூற்றுகளில் உள்ளது. நீரூற்றுகள் 2 ஏரிகளில் இருந்து வருகின்றன. அதில் ஒன்று என்செலாடஸ் மேற்பரப்பின் அருகே அமைந்திருக்க வேண்டும் என்றும் இது மிகவும் பெரியதாகவும், ஆழமாகவும் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


...............................

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com