ஆயுதங்களுடன் மைதானங்களுக்குள் பிரவேசிக்க பாதுகாப்பு தரப்பினருக்கு அனுமதியில்லை.
விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் மைதானங்களுக்குள் ஆயுதங்களுடன் பாதுகாப்பு படையினர் பிரவேசிப்பதற்க இனிவரும் காலங்களில் அனுமதி வழங்கப்போவதில்லை என்று பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் தெரிவித்தார்.
அஸ்கிரிய மல்வத்த பீடாதிபதிகளை நேற்று மாலை சந்தித்து ஆசி பெற்ற பொலிஸ் மா அதிபர் அவர்களுடன் உரையாடும் போதே மேற்படி உறுதிமொழியினை வழங்கியுள்ளார்.
கடந்த வாரம் கண்டி விளையாட்டு கழகத்திற்கும் விமானப் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற றக்பி போட்டியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த பொலிஸ் மா அதிபர், எதிர்வரும் 9ஆம் திகதி இடம்பெறவுள்ள கண்டி விளையாட்டு கழகத்திற்கும் கடற்படையினருக்குமான போட்டிக்கு பலத்த பாதுகாப்பு வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment