பலாலி விமான நிலையத்தின் புனரமைப்பு பணிகள் முடிவுறும் நிலையில்
பலாலி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் புனரமைப்பு பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளதாகவும் பலாலி விமான நிலையம் மிக விரைவில் பொதுமக்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்படும் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிடுகின்றது
இதற்கு இந்திய அரசாங்கத்தின் உதவியும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது கூறப்படுகின்றது. விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் நலன்கருதி காங்கேசன்துறை - பருத்தித்துறை மற்றும் பலாலி ஆகிய பகுதிகளின் உள்வீதிகள் காபெட் இடப்பட்டு செப்பனிடப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பலாலி விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் வட பகுதி மக்கள் பெரிதும் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment