நாங்கள் புலிகள் என்றால்.. கே.பி யார்? மண்டையன்குழுத் தலைவர் கேள்வி.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புலிகளின் அடிவருடிகள் என பரவலாக நிலவிவரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் மண்டையன் குழுவின் முன்னாள் தலைவருமாகிய சுரேஸ் பிறேமச்சந்திரன், தாங்கள் புலிகள் என்றார் கே.பி யார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
யாழ்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் பேசிய அவர் மேற்கண்ட கேள்வியை எழுப்பியதுடன், தொடர்ந்து பேசுகையில்,
அரசின் அமைச்சர்கள் பலர் எம்மை புலிகளின் ஆதரவாளர்கள் எனக் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால் அவர்கள் புலிகளின் முக்கியஸ்தரான கே.பியை தம்முடன் வைத்துள்ளனர். அது மட்டுமல்லாது புலிகளின் மிக முக்கியஸ்தர் அரசில் பிரதி அமைச்சராக இருக்கின்றார். அவ்வாறாயின் நாம் செய்தததைத்தான் அவர்களும் செய்கின்றனர் என்றுள்ளார்.
ஐ.நா சபையின் அறிக்கை வெளிவந்தபோது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவ்வறிக்கை முற்றிலும் பொய்யானது எனவும் முல்லைத்தீவில் எவரும் கொல்லப்படவில்லை என தெரிவித்திருந்தார், ஆனால் தற்போது அரசின் முக்கிய பா.உறுப்பினரான ரஜீவ விஜயசிங்க சுமார் 5000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் என சுட்டிக்காட்டிய சுரேஸ், டக்ளஸ் தேவானந்தா முட்டுக்காலில் நின்று அரசிற்கு சேவகம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment