வெலிக்கடை சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க முடிவு-சிறை ஆணையர்
வெலிக்கடை சிறைச்சாலையில் தற்போது 4600 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வீ . ஆர். டி.சில்வா வெலிக்கடைசிறைச்சாலையிலுள்ள கைதிகளின் எண்ணிக்கையை மூவாயிரமாக குறைப்பதற்குசிறைச்சாலைகள் திணைகளம் தீர்மானித்துள்ளது.எனதெரிவித்துள்ளார்.அத்துடன் அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய இங்குள்ள கைதிகளில் சிலரை மஹர சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையவர்களை நாட்டிலுள்ள மற்றைய சிறைச்சாலைகளுக்கு எதிர்வரும் காலங்களில் மாற்றவுள்ளதாகவும் குறிப்பிட்டார்
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் குற்றச்செயல்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்படும் கைதிகளை அவர்கள் பகல் வேளையில் சந்திப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார். இதன் காரணமாக பலவேறு நிர்வாகப் பிரச்சனைகளை எதிர்நோக்க நேரிடுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment